உயிரே அமுதே
ஊண் சுமந்த நினைவே,
என் காலையெங்கும்
எழுந்த ஆதவளே,
என்னிரவு நிறைத்த
எளிய நிலவே,
நீ தொட்டிலை
நேசித்ததைவிட என்
மார்பினில் தூங்கிய
மாதங்களே அதிகம்
உனக்குக் குத்தியதென்று
மீசை வைக்கவில்லை
உனக்கு வலிக்குமென்று
காதுகுத்த விட்டதில்லை
அப்பாவென்று நீ அழைத்த
அன்பான நேரத்தை
அனுதினமும் காட்டியபடி
அங்கனமே நிற்கிறது கடிகாரம்
ஓடவில்லையா கடிகாரமென்னும்
ஓய்வில்லா பலர் கேள்விக்கு
ஓயாமல் சொல்லி வந்த
ஒரே பதில்
"நான் பிறவிப்பலன் அடைந்த நேரம்".
மணம் முடித்து உனையனுப்பி
தினம் துடிக்கிறேன் நானம்மா
உனை அனுப்பிவிட்ட அடுத்தநாள்
உணவருந்தும் நேரத்திலே
"செல்லமே சீக்கிரம்
சாப்பிடவா" என்றழைத்தும்
மௌனம் நிறைந்ததில் புரிந்தது
மூளையின் அனிச்சை செயலில்
மகளே நீயும் உண்டென்று
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Sunday, June 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பெற்றவனின் வலியை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
////மணம் முடித்து உனையனுப்பி
தினம் துடிக்கிறேன் நானம்மா
உனை அனுப்பிவிட்ட அடுத்தநாள்
உணவருந்தும் நேரத்திலே
"செல்லமே சீக்கிரம்
சாப்பிடவா" என்றழைத்தும்
மௌனம் நிறைந்ததில் புரிந்தது
மூளையின் அனிச்சை செயலில்
மகளே நீயும் உண்டென்று////
இவ்வரிகள் ஓர் தந்தையின் மனத்துயரை மக அழகாய் வெளிப்படுத்துகிறது.
நன்றி நண்பா. ஒற்றைப் பிள்ளை அதுவும் பெண் பிள்ளையாகப் பெற்றவரின் வேதனைக்கு அளவே இல்லை.
/அப்பாவென்று நீ அழைத்த
அன்பான நேரத்தை
அனுதினமும் காட்டியபடி
அங்கனமே நிற்கிறது கடிகாரம்
ஓடவில்லையா கடிகாரமென்னும்
ஓய்வில்லா பலர் கேள்விக்கு
ஓயாமல் சொல்லி வந்த
ஒரே பதில்
"நான் பிறவிப்பலன் அடைந்த நேரம்"./
அன்பின் வரிகள்
Post a Comment