என்னிழல் போல
எங்கும் வருகிறானென்று
இவனைச் சொல்லமுடியாது
இரவிலும் என்னுடனையே
இருப்பதால்.
என் நண்பனென்றும்
எப்பொழுதுமே
இவனைச் சொல்லமுடியாது
இடையூறாகவே பலதடவை
இருப்பதால்.
சில சமயம் இவனை
சிறப்பாக வென்றிருந்தாலும்
பல சமயம் எனக்குப்
படு தோல்வியே
கிடைத்திருக்கிறது.
இவ்வளவு நடந்தும்
இவனை என்னை
விட்டு விலக்காமல்
வளமுடனே வைத்திருப்பது
நாந்தான்.
சுறுசுறுப்பாக
சிந்தையில் வழிகிற
எண்ணங்களுக்கு
எப்பொழுதுமே தடைக்கல்லாய்
நிற்கும் இவன் என் சோம்பேறித்தனம்.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, June 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நண்பனென்று சோம்பேறித் தனத்தை உருவகப்படுத்தி கவிதை செய்முறையால் ஓர் கைதேர்ந்த கவிஞனின் நிலையை அடைந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
நன்றி அமுதா.
அடைந்தேனோ இல்லையோ
அந்த இடத்தை உண்மையில்
அடைந்தேன் ஆனந்தம்
உந்தன் சொல்லில்!
Post a Comment