சுயநலப் புழுதியில்
சிக்கிக் கொண்டு
சந்ததிக்கு சொத்து
சேர்க்கிறான் மனிதன்.
செல்வத்தோடு சேர்த்து
செழுத்த அன்பையும்
பூட்டி வைக்கிறான்.
பெட்டிகளைவிட சில நேரம்
பூட்டுகளின் விலை அதிகரிக்கிறது
அன்பு இருக்கும் நெஞ்சங்களை விட
பணமிருக்கும் பைகள் மதிக்கப்படுகிறது.
இரை தேடத் தெரிந்ததும்
முடிந்துவிடுகிறது விலங்கின் தேவை,
பணம் தேடத் தெரிந்த பிறகும்
உன்று கோல் தேடும் மனிதன் பேதை.
தினம் தினம் மனிதன் தேடும்
பணம் பணம் கெடுக்குது
அவன் குணம் குணம்.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
////பெட்டிகளைவிட சில நேரம்
பூட்டுகளின் விலை அதிகரிக்கிறது
அன்பு இருக்கும் நெஞ்சங்களை விட
பணமிருக்கும் பைகள் மதிக்கப்படுகிறது.////
இந்த வரிகள் என்னை ரொம்பவே டச் பண்ணிட்டுதுங்க. சூப்பர்ப்
Post a Comment