பள்ளி மணி ஓசையில்
பிள்ளைமணிகள் ஓடிட
ஒற்றை முத்து, தவிப்பினில்
சில சோகத்தோடே நடந்திட
சாலையோர நெரிசலில்
சிக்கித் தவித்துப் பிழைத்திட
அந்தி சாயும் கருக்கலில்
வீடும் வந்து சேர்ந்திட
வெந்து தணியும் தனிமையில்
வீட்டுக் கதவும் திறந்திட
வெருமை சூழ்ந்த வீட்டினில்
தனியாய் தினமும் தவித்திட
பாடப்புத்தக சுமைதனில்
சோர்ந்தே விழிகளும் தூங்கிட.....
வேலை நிமித்த இடைஞ்சலில்
வீட்டைக் கொஞ்சம் நினைத்திட
என்றும் குறைந்திடா வேலையில்
நாளைக் கடத்த முயன்றிட
எட்டரை மணி ஓசையில்
எழுந்து விருட்டென விரைந்திட
பேருந்து நெரிசல் பயணத்தில்
குழந்தை ஞாபகம் கசிந்திட
தெருவில் நடக்கும் தனிமையில்
சற்றே வாழ்க்கையும் வெறுத்திட
குழந்தை தூங்கிவிட்ட தருணத்தில்
சோற்றைக் கொஞ்சம் திணித்திட
கணவன் வந்துவிட்ட வேளையில்
இருவரும் தூங்கிய குழந்தையை முத்தமிட......
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Tuesday, June 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முத்தம் உண்மையிலேயே தூங்கிய குழந்தைக்கு மட்டுந்தானா இடப்பட்டது? ஒளியவன் அவர்களே! கவிதை அருமை.
அதுவரைக்கும்தானே எழுதியிருக்கிறேன். மற்றவை உங்கள் எண்ணத்திற்கு! :-)))
ஒளி! முந்தைய கவிதைகளும் தெரியும் படி செட்செய்யவும்! மேலும் முந்தைய பல கவிதைகளுக்கும் பின்னூட்டம் இட்டுள்ளேன் . பார்க்கவும்.
Post a Comment