இதோ எனது தனிமையின்
இன்னொரு கேள்வியாக
நீயும் இடம்பிடித்துவிட்டாய்.
என்னை நீ விரும்புவதாக
என்னிடம் கூறிவிட்டு
என்னுடைய பதிலை
எண்ணியிரண்டு நாட்களுக்குள்
கேட்டிருக்கிறாய்.
காய்கின்ற வெண்ணிலாவில்
காதல் தேடுபவள் நீ
வெண்ணிலவு
வெளிச்சத்தில்தான்
வாழ்க்கையைத் தேடுகிறேன் நான்.
ஆனந்தமாய் கடலில்
அலையை இரசிப்பவள் நீ
உண்மையில் கடலின்
உப்புத் தண்ணீருக்குக்
காரணமானவன் நான்.
நீண்ட கரையில்
நடந்து கொண்டு
ஓடத்தைப் பார்ப்பவள் நீ
வாய்பேசமுடியாது ஓட்டை
விழுந்த அந்த
ஓடத்தில் பயணிப்பவன் நான்.
என்னை நம்பி
எட்டு வைத்து
நடக்கும் என்குடும்பத்தின்
ஒரே முதலீடு
என் படிப்பு.
உன் காதல் பூக்கள்
உதிராமலிருக்க
சோலைவனம் தேடு - எனது
பாலைவனத்தில் காதல்
பூக்கள் பூப்பதில்லை
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Wednesday, June 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
/////காய்கின்ற வெண்ணிலாவில்
காதல் தேடுபவள் நீ
வெண்ணிலவு
வெளிச்சத்தில்தான்
வாழ்க்கையைத் தேடுகிறேன் நான்.
ஆனந்தமாய் கடலில்
அலையை இரசிப்பவள் நீ
உண்மையில் கடலின்
உப்புத் தண்ணீருக்குக்
காரணமானவன் நான்.
நீண்ட கரையில்
நடந்து கொண்டு
ஓடத்தைப் பார்ப்பவள் நீ
வாய்பேசமுடியாது ஓட்டை
விழுந்த அந்த
ஓடத்தில் பயணிப்பவன் நான்.
என்னை நம்பி
எட்டு வைத்து
நடக்கும் என்குடும்பத்தின்
ஒரே முதலீடு
என் படிப்பு.
உன் காதல் பூக்கள்
உதிராமலிருக்க
சோலைவனம் தேடு - எனது
பாலைவனத்தில் காதல்
பூக்கள் பூப்பதில்லை//////
இவ்வரிகளில் உள்ள துன்ப உணர்வுகளைப் புரிந்துகொண்டு சுவைக்க முடிகிறது. அருமை. வாழ்த்துக்கள். இதுஎன்ன தங்களுக்கு ஏற்பட்ட நேர்ச்சியா?
இல்லை நண்பா. அந்தக் கதாபாத்திரத்திலிருந்து சிந்தித்ததின் பலன்.
Post a Comment