என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Sunday, June 8, 2008

கார் முகிலே

மெல்லினமே மெல்லினமே மெட்டில் வாசிக்கவும்...


கார் முகிலே
கார் முகிலே
உந்தன் பால்மழையில்
நெஞ்சம் மகிழும்
தூறலிலே உன் தூறலிலே
துன்பங்கள் யாவையும் கரையும்.

நீ மண்ணில்
விழுந்திடும் நேரம்
சுகமாய் குளிர்ந்தது பூமி
நீ என்னில்
விழுந்த போது
துளி நீராய்ப்
போனேன் நானும்.

(கார் முகிலே.....)

நீ தூறிச் சென்ற துளிகள்
காற்றைக் கிழித்து வரவே
நான் கைகள் ஏந்தி நின்றேன்
துளித் தேனைக் கொடுத்துப் போனாய்.

மேகம் என்ற ஆடை
இந்த ஊரே உடுத்திய போதும்
என் ஆடை கழற்றி எறிந்தேன்
உன்னில் முழுதாய் நனைய

பூக்களில் பசும்புற்களில்
நீ தொட்டுச் சிதறுகிறாய்
பூக்கிறேன் துளி வேர்க்கிறேன்
என் இளமைக் காலம் பார்க்கிறேன்.

குடையில் ஒளியவில்லை
கார் முகிலில் நனைய வந்தேன்
நீரின் திவலைகள் வழியே
நான் வானம் சென்று வருவேன்.

(கார் முகிலே.....)

உந்தன் வருகைக் கண்டு
சில உள்ளம் மகிழ்ச்சியில் பொங்க
உன்னை விட்டு விலக
சில உள்ளம் விரும்பிடக் கண்டேன்

உந்தன் பார்வையில் மறைய
ஓடித் திரியும் உயிர்கள்
கைகள் மட்டும் நனைத்து
தன் காதல் நினைவில் வாடும்

உன்னிலே நான் நனைகயில்
என் துயரம் துடைத்து எறிந்தாய்
உன்னிலே நான் கரைகயில்
எனக்கு இன்பம் நூறு தந்தாய்

துளியாய்த் தூறி வந்தாய்
மழையாய் மாறி நின்றாய்
என் உயிரையும் கொஞ்சம் நனைத்து
நீ அமுதாய் வழிந்து போனாய்.

(கார் முகிலே.....)

2 comments:

said...

உங்கள் கவிதை மழையில் நானும் சற்றே சட்டையைக் கழற்றி விட்டு நனைந்தேன். சொன்னால் நம்புங்கள்! குடைக்குள் ஒளியவில்லை, இக்கவிதை என்னை மிகவும் கவந்தது என்றால் அது மிகையில்லை.

said...

அமுதாய் மழை நனைக்கும்போது அமுதா நனையாமல் போனால் தகுமா???

நனையுங்கள்! நன்றி.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal