தவம் முடியுமுன்னே
சவமானவென் பெற்றோரால்
தீட்சைப் பெறத்
தகுதியில்லா சீடனானேன்
கூடிநின்ற சொந்தங்கள்
தேடியொரு பெண்பார்த்து
தாடியோடு இருந்த என்னை
தாலிகட்டக் கூறியது.
தேவையென்று இனியெனக்கு
தீருமிவ்வுலகில் எதுவுமில்லையென
வீதி கடந்தேன்
விதி கடந்தேன்
ஓடியொரு புது ஊரில்
ஒளிந்து கொள்ள
இடம் பார்த்தேன் - அங்கேயென்
தடம் பதித்தேன்.
ஓடுகின்ற காலமதில்
ஒரிரண்டாண்டுகள் கழிந்திட
வெளிச்சமற்ற ஓரிரவில்
வீலென்ற சத்தத்துடன்
குழந்தையின் அழுகுரல்
கேட்டேன், தூக்கினேன்.
தேடிவர யாருமின்றி
தேதி பல ஓடிடவே
நாடியெனை வந்தடைந்த
நன்மலரை நான் வளர்த்தேன்.
இறுதி மனிதன்
இருக்கும்வரை யாரும்
இங்கே அனாதையில்லையென்று
கூவிக் கூவி தினமந்த
குழந்தயதின் உயிர் வளர்த்தேன்.
பத்து வருடம்
பகலிரவாய் கழிந்துவிட
தொலைத்திட்ட குழந்தைதனை
தேடிய சொந்தம் வர
உயிரினை திருடக்கொடுத்து
உடம்பெல்லாம் சுமையாக
காலெடுத்து நடக்கும்போது
காதுகளில் சேதியொன்று கேட்டது
இறுதி மனிதன்
இருக்கும்வரை யாரும்
இங்கே அனாதையில்லையென்று....
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, June 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஒளி! கவிதை அருமை. ஒன்றை நன்றாய் கவனித்தீரா? சந்தக்கவிதை உமக்கு நனறாய் வருகிறது. இக்கவிதையின் பெரும்பகுதி சந்தத்தால் மிளிர்கிறது.
எடுத்துக்காட்டு:-
///தேடிவர யாருமின்றி
தேதி பல ஓடிடவே
நாடியெனை வந்தடைந்த
நன்மலரை நான் வளர்த்தேன்.///
///பதினைந்து வருடம்
பகலிரவாய் கழிந்துவிட
தொலைத்திட்ட குழந்தைதனை
தேடிய சொந்தம் வர///
நீர் வாழ்க! நின் குலம் வாழ்க! பிரிக்கவே முடியாதது? நீரும் சந்தமும்!
Post a Comment