முட்டைக்குள் இருந்து
முழி.
உலகமென்பது
உனது
வீடு ஒன்றே என்பதை
விட்டொழி.
கடல் காண்
காடு காண்
நாடு காண்
நாட்டு மக்கள் காண்
ஜனகனமன... என்பது
தேசிய கீதம்.
முயற்சி, அனுபவம் என்பது
மானுட கீதம்.
பயணத்திற்கு
புறப்படு என்னோடு.
கோமாவிலிருந்து
கண் விழித்தது போன்ற
உணர்வு, இன்னும்
உலகம் என்ன என்பதை
முழுதாய் அறியாததாய் தோன்றும்
முதல் அறிவு.
குச்சி வைத்து நடக்கும்
குருடர்கள் போல்
அவன்
கைப்பிடித்து
கால்கள் நகர்த்தினாள்.
நில்லப்பா,
இரண்டு வாரத்தில் திருமணம்.
இருவரும் எங்கே செல்கிறீர்கள்?
திருமண காரியங்கள்
ஏராளமாய் இருக்கிறது.
பத்திரிகை கொடுத்தது
பாதி பேருக்குத்தான்
மீதி வேலை
மிச்சமிருக்கு.
என்றார் தந்தை நாகய்யன்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, October 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்லாய் இருக்கிறது கவித்தொடர்.....
எப்படி முடிகிறது இப்படி எழுத....
தொடருங்கள் நல் வாழ்த்துக்கள்,
மிக்க நன்றி நண்பரே. இந்தக் கவிதைத் தொகுப்பிலிருக்கும் 46 பகுதிகளையும் ஒரு வாரத்தில் எழுதி முடித்து நான்கு நாட்கள் மெருகூட்டினேன். :-))) மீண்டும் இப்படியொன்று எழுத முடியுமாவென்பது சந்தேகமே.
அருமையான கவித்தொடர் ..நண்பரே ...
ரசித்துக்கொண்டு இருக்கிறேன் ..
தொடருங்கள் ..
//உலகமென்பது
உனது
வீடு ஒன்றே என்பதை
விட்டொழி.//
நல்ல வரிகள் நண்பரே ...
/ஜனகனமன... என்பது
தேசிய கீதம்.
முயற்சி, அனுபவம் என்பது
மானுட கீதம்./
அருமை
தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி விஷ்ணு, மற்றும் திகழ்மிளிர்.
Post a Comment