சரி வா கிளம்பலாம்.
எங்கே கூப்பிடுகிறீர்கள்?
எந்த இடம் எனக்கு
இந்த சொர்க்கத்தை விட
இன்பமாக இருக்கப் போகிறது?
தோளில் தலை சாய்த்து
கரங்களில் கரம் கோர்த்து,
மரத்தில் படர்ந்த
கொடி போல இருக்கும்
கொடி(இடை)யவளே.
வா, நீ கண்டும் காணாமல் விட்டதை
வடிகட்டி காண்பிக்கிறேன்.
இன்னும் கொஞ்ச நேரம்
இருந்துவிட்டுப் போகலாமே!
முட்டைகள்
கோழியின் சூட்டில்
பத்திரமாய் இருப்பது
போன்ற உணர்வு
பித்தாக்கி இருந்தது அவளை.
இத்தனை நாள்
இருந்தது போல்
இனியும் உன்னை
அடைகாத்து வைத்திருக்கப்
போவதில்லை நான்.
நீ வெளிவரும்
நேரம் வந்துவிட்டது.
பெண்கள் பருந்துகள் - ஆனால்
பறக்கத் தெரியாத
பெங்குயின்களாய்
மாற்றப் பட்டிருக்கிறார்கள்.
அனுபவமென்னும்
இறக்கைகளையும்
பறப்பதற்காய்
பயன்படுத்தத் தவறியவர்கள்.
எனது அனுபவத்திலிருந்து
இரண்டு இறக்கைகள்
உனக்காய்த் தருகிறேன் - அது
உன்னுடையதல்ல.
ஆனால் அது காட்டும்
அறிவில் வானம் ஏறலாம்
உலகின் விளிம்புகள் காணலாம்.
உனக்கான
இறக்கைகள்
இறக்குமதியாகும் வரை
முட்டிப் போராடு
முழு நீள வாழ்க்கைக்கு
அனுபவம் ஒன்றுதான்
அவசியம்.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Thursday, October 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
/// தோளில் தலை சாய்த்து
கரங்களில் கரம் கோர்த்து,
மரத்தில் படர்ந்த
கொடி போல இருக்கும்
கொடி(இடை)யவளே.
வா, நீ கண்டும் காணாமல் விட்டதை
வடிகட்டி காண்பிக்கிறேன்.//
அருமை பாஸ்கர் ..
கண்டும் காணாமல் விட்டதை
காட்டி தருகிறேன் ..அப்படியே அல்ல
அதில் நல்லவைகளை தேர்வு செய்து ...
அருமை பாஸ்கர் ..மீண்டும் பாராட்டுக்கள் ...
அருமை
தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி.
Post a Comment