அப்பொழுதுதான் தியானத்தில்
அவன் அமர்ந்தான்;
கதவு தட்டும்
காதலி சத்தத்தில்
கண் விழித்தான்.
வந்துவிட்டாள் என் காதல் தேவதை,
வழியெல்லாம் வர்ணம் பொழிந்து.
வீட்டு வாசலின் ரங்கோலிக் கோலம்
வீதி கடந்து போயிருக்கும், இவள்
வர்ணம் கண்டு!
என்ன செய்கின்றாய்?
எனும் செல்லக் கோபமும்,
கதவைத் திற எனும்
காந்தக் கட்டளையும்,
"நான் மதி வந்திருக்கேன்" எனும்
நாதம் கேட்டும்,
சிலையாகவே இருந்தான்.
நிலவின் மறுமொழி
மதி அவள் பெயர்.
அவள் ஒரு
அன்னம்.
மாநிறத்தில் மின்னும்
22 காரட் தங்கம்.
பேச்சிலே
பழக்கத்திலே
ஒரு குழந்தை.
காதலிக்கிறேன் என்பதை
கண்ணியமாக உரைத்தவள்.
தூறலாய் அன்பு பொழியும்
தேவதைகளில் ஒருத்தி.
மண்ணில் காதல் செய்த
புண்ணியங்களின்
ஒட்டுமொத்தப் பலன்.
பசும்பாலின் தூய்மை அவளது
பளிங்கு மேனி,
குடிபெயரும் அவளது
குவிந்தவாய் வார்த்தைகள்
குளிர் வாடைக் காற்று.
அவள்
பல நேரம் அவன் சேய்
சில நேரம் அவன் தாய்
இப்போதைக்கு அவனது
இரண்டு வருடக் காதலி,
இன்னும்
இரண்டு வாரத்தில் மனைவி.
(தொடரும்...)
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Thursday, October 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
/வந்துவிட்டாள் என் காதல் தேவதை,
வழியெல்லாம் வர்ணம் பொழிந்து.
வீட்டு வாசலின் ரங்கோலிக் கோலம்
வீதி கடந்து போயிருக்கும், இவள்
வர்ணம் கண்டு!/
/என்ன செய்கின்றாய்?
எனும் செல்லக் கோபமும்,
கதவைத் திற எனும்
காந்தக் கட்டளையும்,
"நான் மதி வந்திருக்கேன்" எனும்
நாதம் கேட்டும்,
சிலையாகவே இருந்தான்./
வார்த்தைகள்
ஓவ்வொன்றும் அருமை
தொடர்ந்து நீங்கள் வாசித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மிக்க நன்றி உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு
Post a Comment