இருட்டி விடத் தொடங்கிவிட்ட
இந்த ஞாயிற்றுக் கிழமையின் இரவு
திங்கட்கிழமையின் அலுவல்களின்
தொடர்ச்சியாகத் தொடங்குகிறது.
கணினி என் கைக்குள் இருந்தாலும்
கணினியின் பிடியில்தான் நான்,
பதினேழு அங்குல திரையில்
பக்கம் பக்கமாய் வேலைகள்.
விடிந்தால் தொடர்ந்துவிடும்
வேலைகளின் முடிவில்
இருட்டிவிடும் இரவோடு
இன்றியமையாததாய் அடுத்தநாள் வேலை.
வார இறுதியில் கணினியைவிட்டு
வெளியே உலகைத் தேடினும்
மாலைப் பொழுதின் தொடக்கத்தில்
முடிந்து போன ஒருநாளின் வருத்தம் மட்டுமே!
ஏதோ ஒரு இனம்புரியாத
ஏக்கத்தில் குறைந்து கொண்டிருக்கும்
இன்றைய இரவின் தூக்கத்தோடு குறைந்து
இருக்கிறது நாளைய வேலைக்கான சுறுசுறுப்புகள்.
நித்தம் உணவும், பாதுகாப்பும்
நிறைந்திருந்தும் வெறுமை பூண்ட
உயிரியல் பூங்காவின் விலங்குகளுக்கும்
உண்மையில் எனக்கும் வித்தியாசமில்லை.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Monday, July 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//////நித்தம் உணவும்இ பாதுகாப்பும்
நிறைந்திருந்தும் வெறுமை பூண்ட
உயிரியல் பூங்காவின் விலங்குகளுக்கும்
உண்மையில் எனக்கும் வித்தியாசமில்லை./////
நீங்களாவது பரவாயில்லை ஒளி! சிலதுகள் கேம் விளையாடுகிறேன் என்ற பேரில் நாள்முழுதும் அதிலேயே மூழ்கிப்போய் விடுகிறதுகள்
arumai
உண்மைதான் அமுதா, பொழுதுபோக்குக்காக நாளையே போக்குபவர்களும் உளர்.
நன்றி அறிவாக்கம்.
Post a Comment