இருபது ஆண்டுகளாக
இந்த வீடும் என் அங்கம்.
நிலத்தடி உப்பு
நீரில் பெயர்ந்துவிடும் சில
சுண்ணாம்பைப் பார்க்கும்போது
சோகம் தொற்றிக்கொள்ளும்
எனது கண்களில்.
இந்த நிலத்தடி நீர்
இப்படி உப்பாய்ப்போனது
ஒரு வேளை நான்
ஓயாமல் சிந்திய
வியர்வைத் துளியாலிருக்கும்.
செங்கலின் சிவப்புகளில்
சின்னச் சின்னதாய்
சிந்திய குருதி கலந்திருக்கும்.
தோட்டத்தின் பச்சையில்
தினம்தோறும் தவறாது
நான் ஊற்றிய அடிகுழாய்
நீர் கலந்தே இருக்கும்.
மெத்தை சுகத்தை விட
மெருகேறிய இந்தத்
தரையில்தான் எனது
தினசரித் தூக்கம்.
அங்குலம் அங்குலமாக
அங்கமெங்கும் கலந்துபோன
வீட்டை விற்றுவிட்டு
வரதட்சணைக் கொடுத்துவிட்டுச்
செல்கிறேன் எனது
சொந்த ஊருக்கு.
இந்த வீடும்
இப்பொழுது புகுந்தவிட்டில்
இருக்கும் என் ஒரே மகளும்
இனி புதிய கைகளில்
இன்பமாய் இருந்தாலே போதும்.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Thursday, July 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இக்கவிதையின் ஊடே பொதிந்துள்ள துயரத்தை எண்ணும் போது மனம் கனக்கிறது. என் இதயத்தைத் தங்களின் எழுத்தால் ஆக்கிரமித்து விட்டீர் வாழ்த்துக்கள்.
உன் இதயத்தை நிறைக்குமளவிற்கு எழுதியதை நினைத்து மகிழ்ச்சிதான். நன்றி நண்பா.
Post a Comment