என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, July 8, 2008

முகம் தேடித் தொலைகிறேன்

பிறந்த பொழுதே
பல அடையாளங்களோடே
பிறந்திருக்கிறேன்.

சாதி,
மதம்,
மொழி,
ஊர்,
நாடு,
குடும்ப கௌரவம்,

இவையாவும் என்னை
ஈன்றவரின் அடையாளங்கள்
இன்று என்னுடன்
ஒன்று சேர்ந்து கொண்டது.

அறிவும்,
அனுபவமும்
போக வேறெதையும்
பிச்சையிட வேண்டாமெனக்கு.

இவையன்றி நீங்கள்
இணைத்தவையாவும்
என்னைப் பிற மனிதனிடமிருந்து
எட்டி நிற்க வைக்கிறது.

எனது சமுதாய முகத்திரையை
எடுத்து எறிய முயற்சித்தும்
முடியாதவனாய் நிற்கின்றேன் - என்
முகம் பார்த்ததும்
நீ இன்னாருடைய மகன்தானே
நின் அடையாளங்கள் இதுதானே
என்று கேட்கும்பொழுதெல்லாம்
என் முகம் தேடித் தொலைகிறேன்.

5 comments:

அகரம் அமுதா said...

அந்த தேடல் எனக்கும் இருக்கிறது. வாழ்த்துக்கள் கவிதை அருமை

Kaaviyam said...

Arumaiyana varigal!! Ippadi eludhukindra marum padithu aamothikiravargal...vaaichollodu nindru vidamal....thanadhu seyal veerathal...melum palarai maatralam...endru enakkuthondrukiradhu.

ஒளியவன் said...

உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி காவியம் அவர்களே!

அவரவர் மாற்றங்களை அவர்களே தேடிக் கொள்வது நல்லதும், நிலையானதும் கூட. அதற்குத் தேவையான அறிவை இப்படி புகட்டுகிறோம், படித்து நலம்பெறுபவர்கள் நலம்பெறட்டும். மகிழ்ச்சிதானே.

Unknown said...

nalla kavithai...
sila samayamgalil intha adayalangalil irunthu nammai piritheduppathu pathugappu illaiyo endru ennum alavuku nam samoogathirkul paravi kidakum mooda adayalangalai sariyai suttineergal...
pettavar namakittar
avaruku pichai verothar ittar....
thalaimurai pichai karargal naam...
en unarchigalai thottathu intha kavithai..
seyallakam seiyya muyarchi edupeen

ஒளியவன் said...

போன நூற்றாண்டின் மிச்சமாகவே நாம். இந்த நூற்றாண்டின் மிச்சமாக நமக்குப் பின் வரும் சந்ததியினர். என்ன செய்ய? விலங்குகளை உடைப்பவர்கள் கொஞ்சம் பேர்தான்.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal