என் விரல்களே
என் கண்களைக்
குத்தி நிற்கின்றன
என் குருதியாவும்
எங்கெங்கோ சிந்தி
தெரித்துச் சிதறுகின்றன
என் நிழல்களே
உடல்களை துரோக
வெயிலில் வாட்டுகின்றன
இதையெல்லாம் கண்டு
இகழ்ச்சியடையத்தான்
இன்னும் உயிர்
இந்த உடலில் ஒட்டியிருக்குதா?
சொத்துக்களைப் பிரிப்பதில்
சண்டையிடும் என் மக்களே
இறந்து விட்ட என் கணவரை
இடுகாடு வரையாவது
எடுத்துச் செல்லுங்கள்
என்னவருக்கு நானே
இடுகிறேன் கொள்ளி.
ஈன்ற இந்த
ஈனப்பிறவியின் வயிற்றையும்
பங்கு போட்டுவிட்டுப்
போய்விடுங்கள் அங்கேயே!
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Tuesday, July 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உறுக்கமான கவிதை. சற்றே மனதை வறுத்தம் தொற்றிக் கொள்கிறது. கவிதை அருமை. வாழ்த்துக்கள்
உண்மைதான் நண்பா, ஆனால் சில இடங்களில் நான் இது போன்ற தகராறுகளைக் கண்டதுண்டு.
Post a Comment