பெற்றோரின் பிம்பங்களில்
புதைந்து போன சுயத்தைக்
காண முடிகிறது
எல்லை இல்லா
எதிர்பார்ப்புகளின் சுமையின்
ஒரு மாத விடுப்பை
ஓரக் கண்கள் காட்டுகிறது
நாளையின் கவலைகளில்
நசுங்கிய நினைவுகள்
இன்றைய கனவுகளில்
இறக்கை வளர்த்தது புரிகிறது
அட்டவணையிலேயே
அடங்கிப் போகும்
அன்றாட வாழ்க்கையின்
அகோரப் பிடியிலிருந்து
விடுபட்டது தெரிகிறது
கணக்குப் பூதங்களிலும்
காகிதப் பேய்களிலும்
பயந்து ஒதுங்கிய
புன்சிரிப்பு வாய்விட்டு
வெளியே வந்து வழிகிறது
ஒவ்வொரு நிமிடமும்
ஓராயிரம் பூக்களின்
அணிவகுப்பாய்த் துள்ளும்
அந்தச் சிறுவனின்
மேகக் கனவுகளுக்கு
முற்றுப்புள்ளியாய்ப் போனது
இன்னும் மூன்று வாரம்தான்
இந்த விளையாட்டையெல்லாம்
மூட்டைக் கட்டிடனும் என்று
முணங்கிய தந்தையின் சொல்லில்.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, July 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
/அட்டவணையிலேயே
அடங்கிப் போகும்
அன்றாட வாழ்க்கையின்
அகோரப் பிடியிலிருந்து
விடுபட்டது தெரிகிறது/
நல்ல இருக்கிறது
////ஒவ்வொரு நிமிடமும்
ஓராயிரம் பூக்களின்
அணிவகுப்பாய்த் துள்ளும்
அந்தச் சிறுவனின்
மேகக் கனவுகளுக்கு
முற்றுப்புள்ளியாய்ப் போனது
இன்னும் மூன்று வாரம்தான்
இந்த விளையாட்டையெல்லாம்
மூட்டைக் கட்டிடனும் என்று
முணங்கிய தந்தையின் சொல்லில்.////
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி திகழ்மிளிர், மற்றும் அமுதா. உங்கள் பின்னூட்டங்கள்தான் பெரும் சக்தியைத் தருகிறது.
Post a Comment