பெங்களூரில் நடக்கும் கொடுமைகளுக்கு கொதிக்கும் மனதில் ஆறுதலுக்கு வழியின்றி....
மீளட்டும் இந்த பாரதம் படுகொலைகளிலிருந்து.
என் கோபம், என் கண்ணீர், என் பாசம், என் மகிழ்ச்சி எல்லாம் கவிதைதான். என் மொழி கவிதை.
-------------------------------------------------------
வெட்டினால் வளர்வதற்கு
இது மயிரல்லவே, உயிர்!
காசுக்காக குண்டு வைக்கும்
கயவர்களே!
உயிரின் விலையறியா மூடர்களே!
உன்னால் போன
உயிர் ஒன்றினைக் கூடத்
திருப்பித் தரமுடியா
தீயவனே!
உனக்குமொரு கேடா உயிர்?
கனவுகளும்
கடமைகளும்
குறிக்கோளும்
அன்பும்
அரவணைப்பும்
ஆற்றப் பெற்ற
மனிதனின் மூளையை
அழிவுக்கே பயன்படுத்தும்
அற்பப் பதர்களே
அறியீரோ குருதி சிந்தும்
அகோரக் குரலை!
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, July 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
:'(
:(:(:(
:(((
word verificationஐ எடுத்திடுங்க ப்ளீஸ்
எடுத்திட்டேங்க. நன்றி. எனக்குத் தெரியாது அது இருக்கிறதென்று. :-(
வாழ்த்துகள். கவிதைத் தன்மையையும் மீறி சற்றே உரைநடைத்தன்மையை அடைந்திருக்கிறது. கவனம்தேவை.
Post a Comment