பிரசவத்திற்கு வருந்தி ஒரு வேதியல் குழாயில்
பிறந்த குழந்தையில் நானும் ஒருவனாயிருப்பேன்.
மூளையைத் தவிற இதயம் போன்ற உறுப்புகளை
முறையாக செயற்க்கையாய் மாற்றி இருப்பர்.
என் வீட்டில் இருக்கும் இயந்திரம்
எனக்குப் பால் கொடுக்க மறந்திருக்காது.
ஆடையிலிருந்து செல்லும் சமிஞ்ஞைகளுக்கு ஏற்ப
அலுவலகத்திலிருந்து தாய் இயந்திரத்துக்கு கட்டளைகள் பிறப்பிப்பாள்.
புத்தகங்கள் இல்லாத பாடசாலையில் கணிணியிலேயே
புதுக்கலைகள் பயில்வேன்.
என்மீது என் அருகிலிருப்பவளுக்கு ஏற்படும் காதலை
எனது கணிணி துல்லியாமக சொல்லிவிடும்.
இருவரின் குணங்களை வைத்து எங்களுக்கு எல்லாப்
பொருத்தங்களும் பொருந்தி இருக்கிறதென்று இயந்திரம் சொல்லும்.
இணையதளத்திலேயே எங்களது திருமணம் பதிவாகும்
இல்லறம் நடத்தத் தேவையான இயந்திரங்கள் வாங்குவோம்.
முதலிரவு கழிக்க வானம் செல்வோம்
முடிந்தால் அங்கிருந்து வீட்டுக்கு ஏதாவது வாங்கி வருவோம்.
எங்களுக்குப் பின்னால் பூமி தெரியும் வண்ணம்
எடுத்த புகைப்படத்தை அலங்காரப் பொருளாய் வைப்போம்.
காலைக் கடன்கள் மட்டும் மாறியிருக்காத உலகில்
கடன்களை முடித்துவிட்டு பணியாற்றச் செல்வோம்.
சில இயந்திரங்களுக்கு எஜமானனாய் நான்,
எனக்கு எஜமானாய் ஒர் இயந்திரம் இருக்கும்.
இட்ட நெல் விதை மூன்றே நாளில் அரிசியாகும்
இயற்கை என்பதே நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும்.
கணிணியில் வைரஸ் பரப்புவதே தீவிரவாதமாக இருக்கும்
கணப்பொழுதில் நாட்டையே குலுக்க இப்படியும், போர் வரும்.
உலகப் பொதுமொழி ஒன்று பேசப்பட்டு வரும்
உலகில் பல மொழிகள் இருந்ததை வரலாறகத்தான் கண்டறிய முடியும்.
இந்தியா தனக்கான வான் திடல் இட்டுருப்பதாய் செய்தி வரும்
இதன் மூலம் வான் சென்றுவரும் செலவு பாதியாய்க் குறையும்.
கால இயந்திரம் ஒன்று மட்டும்
கண்டு பிடிக்கப் படாமல் இருக்கலாம்.
கணவில்லாத நித்திரை தரும்
தலையனைகள் கண்டிப்பாக இருக்கும்.
எல்லாமே இருக்கிறது; இருந்தும்
எதைத் தேடி அலைகின்றோம் என்று தெரியாது.
கணிணிகள் இல்லாத வாழ்வுதான் சுகமென்று
காலம் கடந்த ஒரு ஞானம் வரும்!
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, April 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"இட்ட நெல் விதை மூன்றே நாளில் அரிசியாகும்
இயற்கை என்பதே நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும்." =
வருத்தமான உன்மை. + வாழ்க்கையில் சுவாரசியமும் அவ்வளவாக இருக்காது என நினைக்கிரேன். -- நன்றாக உள்ளது.
மிக்க நன்றிங்க. மிகப் பழைய கவிதைக்கு மீண்டும் உயிரூட்டி இருக்கிறீர்கள்.
Post a Comment