என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Thursday, September 25, 2008
தொலைந்து போயிருக்கிறது
வழிநெடுக விழி அமர்த்தி
வாழ்ந்த வாழ்க்கைதனை
நினைவூட்டி சுவைத்திடவே
நடந்தே செல்லலானேன்
ஊர் எல்கையிலிருந்து!
உயரே தெரிந்த பலகையொன்று
"உங்கள் வரவு நல்வரவாகுக"
என்றென்னை அன்போடு
எதிர்நின்று அழைத்தது
சொப்பனங்கள் சேர்த்தெடுத்தேன்!
எதிரே வேகமாய் வந்த லாரியில்
ஏற்றி வந்த மணலில் கொஞ்சம்
கண்ணில் விழுந்ததால் சற்றே
கவனமாக எடுக்க ஒதுங்கினேன்
தலையில் காய்ந்த சருகொன்று விழுந்தது!
தட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்கையில்
தண்ணிரின்றிக் கிடந்தது
சின்ன வயதில் எல்லோரும் கூடி
ஒன்றாய் விளையாடிய ஆற்றங்கரை,
வழிந்த கண்ணீரில் நனைந்தது அதன் கரை!
Labels:
ஒளியவன்,
கவிதை,
தொலைந்து போயிருக்கிறது,
பாஸ்கர்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்கள் கவிதைகளையும் வலைப் பதிவையும் இன்று காணக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
///தட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்கையில்
தண்ணிரின்றிக் கிடந்தது நாங்கள்
சின்ன வயதில் எல்லோரும்
ஒன்றாய் விளையாடிய ஆற்றங்கரை,
வழிந்த கண்ணீரில் நனைந்தது அதன் கரை!///
கண்ணீரில் நனைத்தது
கவிதை
அன்புடன் ஜீவன்....
மிக்க நன்றி நண்பரே!
Post a Comment