எட்டு வைத்ததிலிருந்தே
பொட்டு வைக்கும் பழக்கம்
பிறந்த மேனியிலிருந்தே
கரத்தில் வளையிட்டது வழக்கம்
தோட்டத்துப் பூக்கள் எல்லாம்
தொடுத்துச் சூடுவேன் தினமும்
வண்ண ஆடைகள் யாவும்
என்னில் உடுத்தினேன் நிதமும்
வயதின் பருவத்தில்
வாய்த்தது திருமணமும்
ஈராண்டு காலத்தில்
ஈன்றது ஒருமகனும்
காலத்தின் கோலத்தில்
கலந்து கணவருயிர் போனதுவே
சோகத்தின் சாபத்தில்
சிக்கியதென் வாழ்வதுவே
விழாக்களின் மேடையில்
வேலையில்லை ஒதுக்கினரே
வம்புதும்பு பேச்சினில்
வருந்தினேன் மகிழ்ந்தனரே
வெண்மேகமது உயிர்த்துளியில்
கார்மேகமென நிறம் மாறுது
பெண்தேகமது வாழ்வினில்
வண்ணமென்பது இனியேது?
விதவைக்கு மாப்பிள்ளையாய்
வேறெங்கும் ஆளில்லை
மறுமணத்தின் மணப்பெண்ணாய்
ஒரு கன்னியே கேட்கும் சில மாப்பிள்ளை
கற்பென்னும் வார்த்தைக்கு
விற்றுவிட்டீர் பெண்பாலை
விதவையென்னும் சொல்லுக்கு
விளக்குங்களேன் ஆண்பாலை?!
நன்றி: அதிகாலை இதழில் வெளியிட்டமைக்கு
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கற்பென்னும் சொல்லுக்கு
விற்றுவிட்டீர் பெண்பாலை
விதவையென்னும் சொல்லுக்கு
விளக்குங்களேன் ஆண்பாலை?!
இவ்வரிகள் சுவைக்கும் படியாய் இருக்கிறது. வாழ்த்துகள்.
நிறைய வடசொற்களைக் கையாள்கிறீர்கள் கவனம்தேவை!
வரும் காலம் எல்லாம் மாறும்
கவிஞரே
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
அருமையான சிந்தனை.... எளிமையான..அழாகான .கவிதை நடை....அற்புதம்!
நன்றி நண்பா அமுதா!
கவனத்தில் கொள்ளுவேன். வடமொழிச் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விடுகிறேன். நன்றி!
நன்றி நண்பர் கோவை விஜய் அவர்களே! மாறினால் மகிழ்ச்சிதானே. மேல் நாட்டு நாகரீகத்தில் எனக்குப் பிடித்த ஒரேப் பழக்கம் விதவை என்று எண்ணாமல் யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்வதுதான். இருப்பினும் அதையும் ஒரு வட்டத்துக்குள் நாம் ஏற்றுக் கொண்டோமானால் நல்லதுதான்.
நன்றி காவியம் அவர்களே!
Post a Comment