வீழ்வதென்று எதுவுமில்லை
மேடு எது பள்ளமெதுவென்று
வானில் தெரியும்வரை
துவண்டு போக எதுவுமில்லை
வெற்றி எது தோல்வியெதுவென்று
சரித்திரம் சொல்லும்வரை
வெற்றிகளும் மகுடங்களும்
ஏழ்மையிலிருந்தே வந்தவை
தங்கக் காசும் பட்டறையில் பிறந்ததுவே!
இங்கே காண்பதுயாவும்
மாயை ஒன்றே
பிரபஞ்சத்தின் புள்ளிகளில் உலகுமொன்றே!
நம் சரித்திரமே
அழிந்து போகும் ஆவணமே
இதற்கு போட்டியெதற்கு? பொய்யெதற்கு?
பசி ஒன்றே நிரந்தரம்
உழைப்பதொன்றே சுக வரம்
உண்மையறிந்தால் வாழ்வு சுகம்பெறும்
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Monday, March 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இப்ப தான் இணையம் பக்கம் வழி தெரிஞ்சுதா ?உங்கள் காதல் கானகம் தொடரை காண ஆவலாக இருக்கிறோம்..............
nllaathaan kirukki irukkeenga...
உங்களது பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
Post a Comment