என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Monday, August 18, 2008
காதலின் உச்சம்
காட்சி: நெடுநாள் காதலர்கள் திருமணம் முடித்து கட்டில் அடையும் தருணம். அங்கே புதிதாய்ப் புரிதலுக்கு எதுவுமில்லை, ஆனால் புதிதாய்க் கொடுத்துப் பெற நிறைய இருக்கிறது. அங்கனம் இது ஒரு பாடலாய்.
[ஆண்]
காதலின் விறகெடுத்து
காமத்தின் தீ கொளுத்தி
குளிர்காயும் கண்ணே
காதலன் துகிலுறித்து
காதலின் கண்பொத்தி
உயிர்த்தீக் குளிக்கும் பெண்ணே
இச்சென்று முத்தமிட்டு
அங்கங்கே தொட்டுவிட்ட
ஆதிவாசிப் பெண்ணே
மிச்சமென்று வெட்கம்
அங்கங்களில் ஓட்டியிருந்தால்
அகற்றிவிடு அது இங்கே வீணே
மெத்தை வேண்டாம்!
இரை தேடிக் காத்திருந்த
புலி தேடி வந்த மானே
மோட்ச நேரத்தின்
காதல் வெப்பத்தில்
எரிந்திடும் அது தானே
[பெண்]
எரிமலையின் கணவாயில்
ஏளனமாய்க் கல்லெறிந்தால்
என்னவாகும் தெரியாதா
பெண்ணிவளின் மேனியில்
பெரிதாகக் காமமெரிந்தால்
துரும்பாவாய் புரியாதா
விண்ணிலிருந்து எட்டிப்
பார்க்கும் நிலவே
வெட்கம் கொண்டு மறையட்டும்
நம்மிலிருந்து எட்டிப்
பார்க்கும் தீயிலே காமம்
கரைந்து காதல் வாழட்டும்
நிலவின் மடியில்
நீள இரவு கழிக்கும்
சூரியன் நீயே
பொழியும் கதிரால்
மடியில் உயிர் ஒளிர்ந்தால்
நானும் இனி தாயே!
- ஒளியவன்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Good good good......
நன்றி கெட்டப் பொண்ணே! ஹி ஹி ஹி
//நம்மிலிருந்து எட்டிப்
பார்க்கும் தீயிலே காமம்
கரைந்து காதல் வாழட்டும்
//
காமத்தின் நோக்கம் பற்றி அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் !
நன்றிங்க! காமம் தீர்ந்த பின்னும் வாழ்வது காதல் ஒன்றுதானே!!!
//பெண்ணிவளின் மேனியில்
பெரிதாகக் காமமெரிந்தால்
துரும்பாவாய் புரியாதா//
அருமை! காமம் என்பது காதலில் வந்தால் தான் இது நேரும்.
நன்றி மகி அவர்களே!
Post a Comment