
பூக்கள் நிறைந்த
பாதைக்கு ஆசைப்பட்டே
பாதங்கள் பலவீனமாகிறது
சின்னஞ்சிறு கற்களுக்கே
சிதைந்து போகிறது பயணம்
வாசகர்களுக்கு ஆசைப்பட்டே
வாசிக்கப்படும் கவிதைக்கு
வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில்
பேனாவும் கண்ணீர் சிந்தி
பொய்யாக அழுகிறது
அள்ளி அனைத்து
பிள்ளை பெற்றுக்கொள்வதான
பெருங்கனவிலேயே வளர்கிறது
சொல்லப் படாத காதலுக்கான
சோகத் தாடியும்
முதல் மதிப்பெண்ணும்
முக்கியக் கற்பனையிலேயே
முகம் தெரியாமல் வலுவாகிறது
தற்கொலைக்கான காரணங்களும்
தாம்புக் கயிறுகளும்
தெருவெங்கும் தேடியலையும்
தேவதைகளின் தேடுதல்களிலேயே
திருமணங்களின் பொழுது
விவாகரத்திற்கான முதலெழுத்து
வெகுவாக எழுதப்படுகிறது
பிறந்த மகன்
பிறந்த மேனியிலிருக்க
லட்சக் கணக்கில் காசு கொட்டும்
லட்சியக் கற்பனைகளிலேயே
மகனின் இசையார்வம் வற்றிவிடுகிறது
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களே!
- ஒளியவன்
4 comments:
well its nice to know that you have great hits here.
அன்பருக்கு எனது நன்றிகள். உங்களைப் போல பெருமக்களாலும், தமிழின் மீது இன்னும் ஆர்வமிருக்கும் அன்பர்கள் கொஞ்சம் பேரின் ஆதரவுக் கரம்தான் இந்த எண்கள். :-)
/வாசகர்களுக்கு ஆசைப்பட்டே
வாசிக்கப்படும் கவிதைக்கு
வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில்
பேனாவும் கண்ணீர் சிந்தி
பொய்யாக அழுகிறது/
/முதல் மதிப்பெண்ணும்
முக்கியக் கற்பனையிலேயே
முகம் தெரியாமல் வலுவாகிறது
தற்கொலைக்கான காரணங்களும்
தாம்புக் கயிறுகளும்
/
அத்தனையும்
உண்மை
கவிதையும்
அருமை
வருக திகழ்மிளிர், தொடர்ந்து வாசித்து வருவதும், பின்னூட்டமிடுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி நண்பரே!
Post a Comment